குமரியில் களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்துள்ளது. இந்த சாலை சீரமைக்க ரூபாய் 14 கோடி 85 லட்சம் செலவில் தார் போடும் பணி நடந்து வருகிறது. குழித்துறை சந்திப்பில் கடந்த வாரம் தார் போடப்பட்டது. இதையடுத்து மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணி நேற்று துவங்கியது. ஒரு வார காலத்திற்கு இந்த பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து முழுமையாக பணி முடியும் வரையிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் மற்றும் கார்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக இயக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் வேறு பகுதிகள் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மார்த்தாண்டம் பகுதியில் நேற்று முதல் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டு வருகிறது.