மாமியார் திட்டியதால் மருமகள் தற்கொலை

மாமியார் திட்டியதால் மருமகள் தற்கொலை;

Update: 2025-05-27 14:54 GMT
செங்குன்றம் அடுத்த மொண்டி அம்மன் நகர் சேர்ந்தவர் அஸ்வின் ராஜ் இவரது மனைவி அனுப்பிரியா 27 இவர்கள் இருவரும் காதலித்து இரு வீட்டாரின் சமூகத்துடன் திருமணம் ஆகி 2 1/2 ஆண்டுகள் ஆகிறது இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து ஃப்ரிட்ஜில் ஐஸ்கிரீம் கீழ கொட்டியதால் அணுப்பிரியாவின் மாமியார் சித்ரா இதையெல்லாம் சரியாக கவனிக்க மாட்டாயா என கேட்டு கண்டித்து உள்ளார் இதனால் மன உளைச்சலில் இருந்த அனுபிரியா வீட்டில் யாரை இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை சாத்திக்கொண்டு வீட்டில் இருந்த மின்விசிறியால் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் வெளியில் சென்ற கணவர் அஸ்வின் ராஜ் பார்த்து அதிர்ச்சடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார் இது குறித்து தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆவதால் பொன்னேரி ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்

Similar News