கொல்லங்கோடு :  சூறைக்காற்றில் சாலையில் விழுந்த மரங்கள்

போக்குவரத்து துண்டிப்பு;

Update: 2025-05-27 14:56 GMT
குமரி மாவட்டம்  கொல்லங்கோடு, நித்திரவிளை மற்றும் மீனவ கிராமங்களில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் விளை நிலங்களில் நின்ற வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அது போன்று ஆங்காங்கே மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. மின் பணியாளர்கள் உடனடியாக சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.       இதில் ஊரம்பு வெள்ளங்கோடு சாலையில் புன்னமூட்டு கடை பகுதியில் சாலையில் ஒரு பக்கம் பலாமரம், மறுபுறம் புளியமரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்றும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

Similar News