ரகசிய தகவலின் பேரில் கஞ்சா கடத்தியவர் கைது
ரகசிய தகவலின் பேரில் கஞ்சா கடத்தியவர் கைது;
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு கோலடி ஏரிக்கரை அருகே உள்ள காலியிடத்தில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்ய ஆண் நபர் ஒருவர் எடுத்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி. D.சுபாஷினி அவர்கள் தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி.M.புவனேஸ்வரி ஆகியோர்கள் கொண்ட குழு சம்பவ இடம் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக கருப்பு நிற ஷோல்டர் பேக்குடன் திரிந்துக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, எதிரியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் எதிரி பழனிவேல் ஆ/வ-48, த/பெ.பாலகுரு, எண்-3/784 ஏ. காரங்குடா, மரக்காவலசை, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூர் என்பதும் கஞ்சாவை ஒடிசா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து எதிரியின் மீது பூந்தமல்லி : 84/2025, 20(b) (ii) (B) NDPS Act வழக்கு பதிவு செய்து எதிரியை பூந்தமல்லி கனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-11, பூந்தமல்லி அவர்களிடம் ஆஜர்ப்படுத்தி உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் ஒப்படைக்கப்பட்டது.