தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்க ஏற்பாடு

இலவச சீருடை;

Update: 2025-05-27 16:24 GMT
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சத்துணவு திட்டத்தில் களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் ஜோடி சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தவுடன் வழங்கும் வகையில், சீருடை தைப்பதற்கான துணிகள் மூட்டை, மூட்டையாக தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டை சாலை அண்ணா நகர அருகேயுள்ள மாவட்ட துணி வெட்டும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மையத்தில் மாணவ மாணவிகளின் அளவுகளுக்கு ஏற்ப இயந்திரம் மூலம் துணிகள் வெட்டப்பட்டு, தஞ்சாவூர குந்தவை நாச்சியார் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம், தஞ்சாவூர் மகளிர் தையல் தொழில கூட்டுறவு சங்கம், கும்பகோணம் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்குள்ள மகளிர் சீருடைகளை தைத்து, கூட்டுறவு சங்கங்களுக்கே கொண்டு கொடுக்கின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் 4 ஜோடி சீருடைகள் வழங்க வேண்டிய நிலையில், முதல் கட்டமாக 2 ஜோடி சீருடைகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள. மீதியுள்ள 2 ஜோடிகள் விரைவில் அனுப்பிவைக்கப் பட உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,07,050 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் அனுப்பப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News