தஞ்சாவூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயக் கூலித் தொழிலாளி பலி
விபத்து;
தஞ்சாவூர் அருகே 7 பட்டி நால்ரோடு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, விவசாயக் கூலித் தொழிலாளி படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தஞ்சாவூர் அருகே குருங்குளம் வாகரக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (70). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த 25 ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்து தனது மொபட்டில் திருக்கானூர்பட்டிக்கு வந்தார். அங்கு வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஏழு ப்பட்டி மெயின் ரோடு, நால்ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் கோவிந்தராஜ் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கோவிந்தராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவிந்தராஜனின் மனைவி பத்மாவதி தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.