பசுமாடு உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்
பெரியபாளையம் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;
பெரியபாளையம் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அக்கரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(30) இவருக்கு சொந்தமாக 4 பசுமாடுகள் உள்ளது. இந்த நிலையில் இவரது பாட்டி மணிலா என்பவர் பசுமாடுகளை அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு தாழ்வாக சென்று கொண்டிருந்த மின்சார கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பசுமாடு மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைக் கண்ட மூதாட்டி மணிலா கத்தி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின்சார இணைப்பை உடனடியாக துண்டித்தனர். இதனால் அங்கு மேய்ந்து கொண்டிருந்த மற்ற மாடுகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மின்சாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.