கோவை: யாசகம் கேட்பது போல் நடித்து திருட்டு !

கணபதி அருகே உள்ள அத்திபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பம்ப் கம்பெனியில், யாசகம் கேட்பது போல் வந்த ஏழு வடமாநில பெண்கள் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர் மற்றும் பித்தளை உலோகங்களைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-05-28 02:57 GMT
கணபதி அருகே உள்ள அத்திபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பம்ப் கம்பெனியில், யாசகம் கேட்பது போல் வந்த ஏழு வடமாநில பெண்கள் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர் மற்றும் பித்தளை உலோகங்களைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கம்பெனி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பதிவான சிசிடிவி காட்சிகளில், திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண், கம்பெனியில் உள்ள கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த ஃபினாயில் பாட்டிலையும் திருடிச் சென்றது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இது போன்ற சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் உங்கள் பகுதிகளில் சுற்றித் திரிந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News