சிஎஸ்ஐ பேராலய அலுவலகத்தில் பெண் போதகர் உள்ளிருப்பு

நாகர்கோவில்;

Update: 2025-05-28 15:02 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தாதியர் கல்லூரியில் சிற்றாலய போதகராக இருப்பவர் ஜாஸ்மின் லதா. இவர் இன்று நாகர்கோவில் சிஎஸ்ஐ பேராலய அலுவலகத்தில் பேராயர் செல்லையா அறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 2009 ம் ஆண்டு பேராயத்தில் பெண் இறைப்பணியாளராக நியமனம் பெற்றதாகவும் அன்றிலிருந்து 2025 வரை மார்த்தாண்டம் L.M.S. மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சிற்றாலய போதகராக 16 வருடங்கள் செயல்பட்டு வந்துள்ளார். தற்போது இவர் மார்த்தாண்டம் தாதியர் கல்லூரி சிற்றாலய போதகராக பேராயத்தால் இடமாற்றம் செய்யப்பட்டு திருப்பணியினைத் செய்துவருகிறார். இந்நிலையில் 2023 -ம் ஆண்டு அருட்பொழிவு பெற தகுதியானவர்கள் வரிசையில் 5-வது இடத்திலிருந்த அவரது பெயர் நீக்கப்பட்டு 13 பேருக்கு அருட்பொழிவு கொடுக்கப்பட்டதாகவும், தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக அவருக்கு அருட்பொழிவு தராமல் நிறுத்தி வைக்கப்பட்டதினால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது.2025 அன்றைய அருட்பொழிவு பட்டியலில் தனது பெயரையும் சேர்த்து அருட்பொழிவு தந்து திருப்பணியினைத் தொடர வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் சிஎஸ்ஐ பேராலய பேராயர் செல்லையா அறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

Similar News