சாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை முழக்கப் போராட்டம் 

போராட்டம்;

Update: 2025-05-28 16:49 GMT
சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்திட வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தஞ்சாவூர் மாவட்ட குழு சார்பில், மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்கப் போராட்டம், தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பாக செவ்வாய்க்கிழமை மாலை, சங்க மாவட்டத் தலைவர் கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில், சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.சரவணன், கே.அபிமன்னன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் ப.சத்தியநாதன், தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் களப்பிரன், மாவட்டச் செயலாளர் விஜயகுமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஹரிஷ், வசந்த் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் என்.குருசாமி, மக்கள் ஒற்றுமை மேடை இரா.புண்ணியமூர்த்தி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், எல்ஐசி ஊழியர் சங்கம் சேதுராமன், செல்வராஜ், பாரதி புத்தகாலயம் பொறுப்பாளர் கோதண்டபாணி மற்றும் சங்க மாவட்ட நிர்வாகிகள், சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News