ஜமாபந்தியில் பட்டா வழங்க கோரி முற்றுகை போராட்டம்

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்ற நிலையில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்;

Update: 2025-05-29 00:12 GMT
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்ற நிலையில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்டம் ஏலியம்பேடு ஊராட்சியில் சர்வே எண் 179/1ல் அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் நிலத்தில் 70-க்கும் மேற்பட்ட பூர்வீகமாக குடியிருக்கும் மக்களின் வீடுகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்)அறிவித்த இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட பொன்னேரி வட்டாட்சியர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர், மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் இதுவரை வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. அதனால் கிராம மக்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தி அதிகாரியிடம் மனைபட்டா வழங்கக்கோரி மனு கொடுத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் உழைப்போர் உரிமை இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஜானகிராமன் தலைமையில் கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நுழைய முற்பட்டபோது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.அதனால் நுழைவாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஜமாபந்தி அலுவலர் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

Similar News