ரயில் மோதி மினிலாரி டிரைவர் பலி

விபத்து;

Update: 2025-05-29 04:41 GMT
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவருடைய மகன் பிரபாகர் (வயது 36). மினி லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சசிகலா (21). இவர்களுக்கு 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரபாகர் சிறுநீர் கழித்து வருவதாக கூறி வெளியில் சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது இரவு 1.15 மணி அளவில் தாம்பரம்- ராமேசுவரம் விரைவு ரயில் பிரபாகர் மீது மோதியது. இதில்தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரபாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பட்டுக்கோட்டை ரயில்வே போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் வேழவேந்தன், இசையரசன், ஏட்டு சத்தியகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த பிரபாகர் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக பட்டுக்கோட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுநீர் கழிக்க ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மினிலாரி டிரைவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News