மது போதைக்கு அடிமை: காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை

தூத்துக்குடி மதுவிற்க்கு அடிமையானதில் மன உளைச்சலுக்கு ஆளான காவல் உதவி ஆய்வாளர் கருப்பசாமி என்பவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி சிகிச்சை பலனின்றி இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிதாபமாக பலி;

Update: 2025-05-29 10:32 GMT
தூத்துக்குடி மதுவிற்க்கு அடிமையானதில் மன உளைச்சலுக்கு ஆளான காவல் உதவி ஆய்வாளர் கருப்பசாமி என்பவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி சிகிச்சை பலனின்றி இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிதாபமாக பலி தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ட்ரோல் ரூமில் பணிபுரிந்து வருகிறார் மதுவிற்கு அடிமையான காவல் உதவி ஆய்வாளர் கருப்பசாமி அடிக்கடி மது பழக்கத்திலிருந்து இருந்து மீள சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது ஆனால் சிகிச்சைக்கு சென்று வந்த பின்பும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார் இதன் காரணமாக குடும்பத்தில் தகராறு இருந்து வந்துள்ளது இதைத்தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான கருப்பசாமி கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்துள்ளார் இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி எலி மருந்து வாங்கி அதை மதுவில் கலந்து குடித்துள்ளார் இதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் கருப்பசாமி மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக பலியானார் தூத்துக்குடியில் மது பழக்கத்திற்கு அடிமையான காவல் உதவி ஆய்வாளர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Similar News