குமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு பகுதியில் பழையாறு அமைந்துள்ளது. இந்த பழையாற்றின் வடக்கு பகுதியில் மறுகரையில் தடிக்காரன் கோணம் செல்ல காங்கிரிட்டால் ஆன பழமையான கம்பி பாலம் (சுமார் 4 அடி வீதியில் 18 அடி நீளத்தில்) அமைந்திருந்தது. இதில் இரு சக்கரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும் மேலும் பாலம் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்தது. தற்போது சுமார் 44 லட்சத்தில் புதிய பாலம் கடந்த மார்ச்மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைத்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாகபெய்து வரும் மழையின் காரணமாக பழையாற்றின் குறுக்கே அமைத்தநடைபாதை தண்ணீரில் அடித்து சென்றது. இதனால் தினசரி விவசாய கூலி தொழிலாளிகள் பணிகளுக்கு செல்ல சிரமபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், மாவட்ட பொதுப்பணி துறையும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி பழையாற்றின் குறுக்கே தற்காலிகமாக இரும்பு கம்பி பாலம் அமைத்து கொடுக்க ஒப்பந்ததாரர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.