அடையாளம் தெரியாத வாலிபர் சடலம்

மணவாளகுறிச்சி கடற்கரையில்;

Update: 2025-05-29 15:26 GMT
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே சின்னவிளை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பகுதியில் நேற்று முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் டி-ஷர்ட் அணிந்திருந்தார்.  பார்த்தவர்கள் உடனடியாக குளச்சல் மரைன் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். மரைன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.     இறந்தவர் யார்?  என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து மனவளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?  அவர் எப்படி இருந்தார்?  என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News