கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் 2.55 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் இன்று காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி பேருந்து நிலையத்தின் நிகழ்வு தொடங்கி வைத்தார் . தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில்:- கேரளாவில் கண்டெய்னர் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் குமரி மாவட்ட பகுதிகளிலும் பொருள்கள் கரை ஒதுங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அந்த அந்த இடத்துக்குச் சென்று இரவு வரை அங்கேயே இருந்து கண்காணித்துள்ளனர் . இது சம்பந்தமாக கடல் இயல் வல்லுனர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இது சம்பந்தமாக இதில் நிபுணத்துவம் பெற்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த குரியன் என்பவரின் அறிவுரையும் பெறப்பட்டு கழிவுகள் அள்ள பட்டு வருகின்றன. திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் இணைந்து கரை ஒதுக்குவது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்வார்கள் . நேற்று எடுக்கப்பட்ட பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது . இது சம்பந்தமாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி விவகாரத்தை பொருத்தவரையில் இது அப்பன் மகன் பிரச்சனை. நேற்று வந்து பேசுவார்கள். இன்று வந்து பேசுவார்கள். இது நேற்று இன்று நாளை கதை தான் என அவர் தெரிவித்தார்.