கோவை: உணவில் பல்லி- உணவக உரிமையாளர் புகார் !
உணவகத்தில் பல்லி இருந்ததாக வெளியாகிய வீடியோ தொடர்பாக, உரிமையாளர் உமாபதி இது சதியாக செய்யப்பட்டதென மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.;
கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயல்படும் தனியார் உணவகத்தில் பல்லி இருந்ததாக வெளியாகிய வீடியோ தொடர்பாக, உரிமையாளர் உமாபதி இது சதியாக செய்யப்பட்டதென மாநகர காவல் ஆணையரிடம் நேற்று புகார் அளித்தார். கடந்த மே 27ஆம் தேதி நான்கு பேர் உணவகத்தில் சாப்பிட வந்தபோது இந்த விவகாரம் நிகழ்ந்ததாகவும், பின்னர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 12 குற்றச்சாட்டுகளுடன் உணவகத்தை ஏழு நாட்களுக்கு மூட நோட்டீஸ் அனுப்பியதாகவும் அவர் கூறினார். உணவக சிசிடிவி காட்சிகளில், பல்லி திட்டமிட்டு உணவில் போடப்பட்டிருப்பது பதிவாகியுள்ளதாகவும், இந்த சம்பவம் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க உருவாக்கப்பட்ட சதியாக இருப்பதாகவும் உமாபதி தெரிவித்தார். காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடத்த வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.