கோவை: குப்பை மாற்று கட்டமைப்பு – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள சமர்பன் மயானம் அருகே குப்பை மாற்று கட்டமைப்பை அமைக்க உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.;

Update: 2025-05-30 03:34 GMT
கோவை மாநகராட்சியின் 26-வது வட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள சமர்பன் மயானம் அருகே குப்பை மாற்று கட்டமைப்பை அமைக்க உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இம்மையனத்தை சுற்றியுள்ள 27 குடியிருப்புப் பகுதிகளில் 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மயானத்திற்கு அருகிலேயே குடிநீர் தொட்டிகள், பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ள நிலையில் குப்பை மையம் அமைப்பது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாநகராட்சி ஜேசிபி மூலம் இடத்தை தோண்டியபோது பழைய மனித எலும்புக்கூடுகள் வெளியே வந்ததால் மக்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர். m பீளமேடு உரிமை மீட்புக் குழு திட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில் நேற்று இந்து முன்னணி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசியவர், மயானத்தின் ஒரு பகுதி ஏற்கனவே குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. மீதி இடங்களையும் ஆக்கிரமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மக்கள் உணர்வுகளை மதித்து திட்டத்தை கைவிட வேண்டும் என்றார். மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றன. நீதிமன்றத்தில் தடையாணை பெற முயற்சிகள் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News