சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி
மோட்டார் சைக்கிள் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருதாத்தாள்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் இசக்கிமுத்து (23) இவர் சங்கரன்கோவிலுக்கு புறப்பட்டு சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிள் இருந்து தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டது, இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வாலிபர் உயிரிழந்தார். இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.