கோவை: மழையால் காய்கறி வரத்து பாதிப்பு !

கோயம்புத்தூரில் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து பெய்யும் கனமழை மற்றும் சாரல் மழையால் காய்கறி வரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக, அத்தியாவசியக் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2025-05-30 06:32 GMT
கோயம்புத்தூரில் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து பெய்யும் கனமழை மற்றும் சாரல் மழையால் காய்கறி வரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக, அத்தியாவசியக் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவமழை இந்தாண்டு வழக்கத்தைவிட முன்னதாகவே தென்மேற்கு மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்களில் நீர்நிலை அதிகரிப்பு காணப்படுகிறது. முந்தைய வாரங்களில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனையானாலும், தற்போது மழையால் வரத்து குறைந்ததால் விலை மீண்டும் உயரலாம் என விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், சாதாரண மக்களின் அன்றாட செலவுகளை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. கோவை மாநகராட்சி உக்கடம் சில்லறை விற்பனை காய்கறி அங்காடியில் இன்று வரத்து அதிகரிப்பால், தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. சந்தைகளிலும் வாகனங்களிலும் 6-7 கிலோ தக்காளி ரூ.100க்கும், 4-5 கிலோ வெங்காயம் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Similar News