கோவை: இரவில் உலா வரும் காட்டுப்பன்றிகளால் பொதுமக்கள் அச்சம்!

குட்டிகளுடன் நான்கு காட்டுப்பன்றிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.;

Update: 2025-05-30 06:49 GMT
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 41-வது வார்டு, பி.என்.புதூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று குட்டிகளுடன் நான்கு காட்டுப்பன்றிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. உடனடியாக வீட்டின் கேட்டுகளை மூடிய பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காட்டுப்பன்றிகள் அங்கிருந்து சென்றுவிட்டன. பொதுமக்கள் அதிகம் வசிக்கும், குறிப்பாக குழந்தைகள் விளையாடும் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நுழைவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பன்றிகளால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படும் முன், தமிழக அரசும் வனத்துறையும் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News