குமரி மாவட்ட திருக்கோயில்களில் பூஜை பொருட்கள் விற்பனை உரிமம் கோடிக்கணக்கில் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏல உரிமை பெற்றவர்கள் அதிக லாப நோக்கில் தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அனைத்து கோயில் விற்பனை நிலையங்களிலும் விலைப்பட்டியல் பக்தர்களின் பார்வைக்கு வைத்து அவ்வப்போது அதிகாரிகள் சோதனை செய்து அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்க கோரி விசுவ இந்து பரிஷத் மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா, தலைமையில் விஷ்வ ஹிந்து பரிஷத் தர்மப்பிரச்சா மாநில இணை அமைப்பாளர் காளியப்பன், மாவட்ட அமைப்பாளர் ஜெகன், மாநகர பொதுச் செயலாளர் கார்கில் மணிகண்டன், சுசீந்திரம் ஒன்றிய தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :- குமரி மாவட்ட திருக்கோயில்களில் பூஜை பொருட்கள் விற்பனை உரிமம் கோடிக்கணக்கில் ஏலம் விடப்பட்டுள்ளது. உரிமம் பெற்றவர்கள் அதிக லாபம் பெறுவதற்காக தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்று வருகிறார்கள் என்ற குற்றசாட்டு உள்ளநிலையில் நாகராஜாகோவில் கடந்த ஆண்டைவிட இரண்டுமடங்கு அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள ஆன்மீகசுற்றுலா ஸ்தலங்களில் இருக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், அருள்மிகு நாகராஜா கோவில் உள்பட ஏராளமான ஆன்மீசுற்றுலா ஸ்தலங்களில் கோயில்களில் ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்களிடம் பூஜை பொருட்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பெற்று வருவதாக தகவல்கள் உள்ளன. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.