ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழமை வாய்ந்த சந்தன மாரியம்மன் கோவில் முளைப்பாரி தூக்குதல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது., ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழமை வாய்ந்த சந்தன மாரியம்மன் கோவில் முளைப்பாரி தூக்குதல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது., ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழமை வாய்ந்த சந்தன மாரியம்மன் கோவில் முளைப்பாரி தூக்குதல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது., ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இந்திராநகர் பகுதியில் பழமை வாய்ந்த சந்தன மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் அனைத்து சமுதாய மக்கள் நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் வைகாசி மாதம் முளைப்பாரி திருவிழா 7 நாட்களுக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு வைகாசி மாதம் முளைப்பாரி தூக்குதல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த முளைப்பாரி தூக்குதல் வைபவத்திற்கு பெண்கள் 21 நாட்கள் சந்தன மாரியம்மனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி நவதானியங்களால் முளை கட்டுதல் செய்து முளைப்பாரி நாற்று வளர்தனர்.ஏழு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இறுதி நாளன இன்று சந்தன மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் செய்து வளர்த்த முளைப்பாரியை 150 க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் தலையில் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக வளம் வந்து தங்கள் நேற்றி கடனை செலுத்தினர். ஆண்களும் தங்கள் கைகளில் மஞ்சள் காப்பு அணிந்து ஒரு வாரம் விரதம் இருந்து தங்களது நேற்றி கடனை செலுத்தினர். அம்மனுக்கு விரதம் இருந்து நேற்றி கடனை செலுத்தினால் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும், திருமணம் ஆகாத ஆண்கள் பெண்களுக்கு திருமணம் ஆகும், நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.இந்த திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.