நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு 

பாராட்டு;

Update: 2025-05-30 17:20 GMT
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் முன்னிலையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.  இதில், மாவட்ட ஆட்சித்தலைவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி விழுக்காட்டினை அதிகப்படுத்தியுள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.            12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 19 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 104 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலை பள்ளிகளுக்கும், சென்ற ஆண்டை விட தேர்ச்சி விழுக்காட்டை அதிகப்படுத்திய 262 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.  பின்னர் ஆட்சியர் கூறுகையில், "இனிவரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதை ஊக்குவிக்கும் வண்ணமும் மற்றும் இக்கல்வியாண்டில் இப்பள்ளிகளின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டும் விதமாகவும் இச்சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது" என்றார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.அண்ணாதுரை, மாவட்டக் கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News