சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உழவரைத் தேடி திட்டம் 

வேளாண்மை;

Update: 2025-05-30 17:25 GMT
தஞ்சாவூர் மாவட்டம்,  சேதுபாவாசத்திரம் வட்டாரம் குருவிக்கரம்பை -1, மற்றும் ஆலடிக்காடு வருவாய் கிராமங்களில்  வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் வேளாண்மை துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், சார்பு துறைகளான கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை, மேலாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு வேளாண்மையினையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும், துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் எடுத்துக் கூறுவர்.  மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வட்டாரத்தில் இரண்டு கிராமங்களில் இந்த முகாம்கள் நடைபெறும். இந்த முகாமில் மண் மாதிரிகள் சேகரித்தல் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.  மேலும் விவசாயிகள் தங்களது வயல்களில் மண் மாதிரி எடுத்து வந்து முகாம் நடைபெறும் நாட்களில் பகுப்பாய்வு செய்து பயன்பெறலாம்.  விவசாயிகள் வரும்போது சிட்டா, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை எடுத்து வந்து துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் மற்றும் இதர திட்டங்களான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், நெல் தரிசில் உளுந்து சாகுபடி திட்டம், விதை கிராமத் திட்டங்களின் கீழ் விதை நெல், உளுந்து, எண்ணெய் வித்துக்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவை போன்ற வேளாண் இடு பொருட்களை மானிய விலையில் இந்த முகாமிலும், சம்பந்தப்பட்ட வேளாண்மை விரிவாக்கம் மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் பெற்று பயனடையலாம் என்று சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி தெரிவித்துள்ளார்.

Similar News