ஆற்றுப் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
மயிலாடுதுறயில் வாய்க்கால் படுகையை ஆக்கிரமித்த கொட்டகை அகற்றம் ஆக்கிரமிப்பாளர்கள் எதிர் வாக்குவாதத்தால் பரபரப்பு;
மயிலாடுதுறை நகர் வழியாக செல்லும் முத்தப்பன் காவேரி வாய்க்கால் ராகவேந்திரா நகர் பகுதியில் 1 ஏக்கர் படுகை உள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆக்ரமித்து தனி நபர்கள் சிலர் 10க்கும் மேற்பட்ட கீற்று கொட்டகை அமைத்தனர். இதுகுறித்து மயி.லாடுதுறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஆக்கிரமனத்தை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார். மயிலாடுதுறை நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் கண்ணதாசன் தலைமையில் மயிலாடுதுறை சரக வருவாய் ஆய்வாளர், காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நீர்வளத் துறையின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. வந்த பொதுமக்கள் சிலர் ஆக்ரமிப்பு அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முத்தப்பன் காவேரி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமப்புகளை ஏன் முழுமையாக அகற்றவில்லை மற்ற ஆக்ரமிப்புகள் கண்ணுக்கு தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பி அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து அதிகாரிகள் பணிகளை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.