சூலூர்: குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு !
ஆச்சான்குளத்தில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான்குளத்தில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆச்சான்குளம், குளத்தூர் மற்றும் நீலாம்பூர் ஆகிய பகுதிகளுக்கு அருகில் உள்ள குளத்தில் சடலம் மிதப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அழுகிய நிலையில் இருந்த அந்த சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் உடற்கூறு ஆய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.