செங்கோட்டையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணி தொடக்கம்
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணி தொடக்கம்;
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சிக்குள்பட்ட சுப்பிரமணியாபுரம் உரக்கிடங்கு வளாகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.7.65 கோடியில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகா்மன்ற தலைவா் ராமலெட்சுமி, முன்னாள் நகா்மன்ற தலைவா் எஸ்எம்.ரஹீம், நகராட்சி ஆணையாளா் புனிதன், நகராட்சி துணை பொறியாளா் ஆனந்தன் நகா்மன்ற உறுப்பினா் மேரி கலந்து கொண்டனா்.