தென்காசி புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்;

Update: 2025-05-31 01:56 GMT
தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கடந்த ஆண்டு நேரிட்ட சாலை விபத்துகளுடன் ஒப்பீடு செய்து, நிகழாண்டில் சாலை விபத்துகளை குறைப்பது குறித்தும், தென்காசி நகருக்குள் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தென்காசி புறவழிச்சாலை பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தென்காசி நகரின் கிழக்கு பகுதியான ஆசாத் நகரில் இருந்து யானை பாலத்தின் மேற்கு பகுதியில் உள்ள தாய் பாலா திரையரங்கம் இருந்த இடம் வழியாக சென்று இலஞ்சி ரயில்வே மேம்பாலத்தில் சென்று இணையும் வகையில் 6 கி.மீ. நீளம் கொண்ட புறவழிச்சாலை பணிகள் தொடங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக இலஞ்சி ரயில்வே மேம்பாலத்திலிருந்து தாய்ப்பாலா திரையரங்கம் வரை 3 கி.மீ. தொலைவுக்கு ரூ.35 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

Similar News