கோவை: தங்க சங்கிலி பறிப்பு - பாய்ந்தது குண்டர் சட்டம் !
சுந்தராபுரம் பகுதியில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.;
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த நவீன் ஆன்டனி ராஜா (28) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர், சுந்தராபுரம் பகுதியில், ஒரு பெண்ணின் கழுத்திலிருந்த ஏழரை பவுன் தங்கத் தாலிக் கொடியைப் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சுந்தராபுரம் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், நவீன் ஆன்டனி ராஜா கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்த விசாரணையில், நவீனுக்கு பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் கீழ், குண்டர் தடுப்புச் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான நகல் சிறையில் இருக்கும் அவரிடம் நேற்று வழங்கப்பட்டது.