கோவை: சங்கிலி பறிப்பு – ஒருவர் கைது !
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 55 வயது பெண்ணிடமிருந்து 4½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.;
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 55 வயது பெண்ணிடமிருந்து 4½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில், சம்பவத்துடன் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மணிகண்டன் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நகை மற்றும் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.