கழிவரையில் தங்கி இருந்த தொழிலாளர்கள்
திருவேற்காட்டில் புதிதாக கட்டி திறக்கப்படாத கழிவறையில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள.;
திருவேற்காட்டில் புதிதாக கட்டி திறக்கப்படாத கழிவறையில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள். சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு.. திருவேற்காடு அடுத்த வீரராகபுரம் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இதன் அருகிலேயே ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டு இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்து வருகிறது இந்த நிலையில் பயன்பாட்டிற்கு வராத பொது கழிப்பிட வளாகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து அங்கேயே சமைத்து சாப்பிடும் வீடியோ பதிவு காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நகராட்சி அதிகாரிகள் பயன்பாட்டிற்கு வராத புது கழிவறையில் தங்கி இருந்த வட மாநில தொழிலாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள் இது குறித்து விசாரித்த போது அருகில் தனியாருக்கு சொந்தமான கோவில் ஒன்று கட்டப்பட்டு வருவதாகவும் அங்கு அவர்களை தங்க வைக்க இடம் இல்லாததால் பயன்பாட்டிற்கு வராத பொது கழிப்பிட அறையில் தங்க வைக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரக்கூடிய கர்ப்பிணி பெண்கள் இந்த கழிவறையை பயன்படுத்துவார்கள் என கோரிக்கை எழுந்துள்ளது. பயன்பாட்டிற்கு வராத கழிவறையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது