கோவை: வீடுகளில் சாக்கடை நீர் புகுந்து மக்கள் அவதி !
கோவை பேரூர் செட்டிபாளையம் இந்திரா காலனியில் கனமழை காரணமாக சாக்கடை நீர் கலந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்ததால், மக்கள் சமுதாயக் கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாத முகாமுகளில் முதியோர்கள், பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.;
கோவை பேரூர் செட்டிபாளையம் இந்திரா காலனியில் கனமழை காரணமாக சாக்கடை நீர் கலந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்ததால், மக்கள் சமுதாயக் கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாத முகாமுகளில் முதியோர்கள், பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 35 ஆண்டுகளாக வசித்து வரும் இந்திரா காலனி மக்களுக்கு இதுவரை கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படாததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தினக்கூலி தொழிலாளர்கள் வேலை இழப்பு, உணவுப் பொருட்கள் சேதம் போன்ற பிரச்னைகளால் அவதியடைந்துள்ளனர். மழை நிவாரணம், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் நேரில் வந்து நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் எனவும் மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.