உலக புகையிலை ஒழிப்பு தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதி மொழி!
உலக புகையிலை ஒழிப்பு தினம்:;
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தி்ல் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை பயன்படுத்துவதினால் ஏற்படும் மாசிலிருந்து நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மேயர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.