முன்னாள் விஏஓ வீட்டில் நகை பணம் கொள்ளை!
ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 10 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணம் திருட்டு- எப்போது வென்றான் போலீசார் நேரில் விசாரணை;
ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 10 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணம் திருட்டு- எப்போது வென்றான் போலீசார் நேரில் விசாரணை தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே எப்போது வென்றான் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா மகன் சீனிவாசன் . இவர் விளாத்திகுளம் அருகே நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் அவரது வீடு உடைக்கப்பட்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் எப்போதும் வென்றான் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையெடுத்து போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த பத்து பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அதேபோன்று மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆளில்லாத வீட்டில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.