சிறுவனுக்கு தவரான சிகிச்சை மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டம்
அருகே சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததை கண்டித்து பெற்றோர்கள் தனியார் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
அருகே சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததை கண்டித்து பெற்றோர்கள் தனியார் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்து திருநின்றவூர் ராஜாங்குப்பம்,பஜனை கோவில் தெருவை சார்ந்தவர் பார்த்திபன் கண்ணம்மாள், இவரது மகன் கிஷோர் 11வயது சிறுவன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது, இதனால் காலின் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட கிஷோருக்கு காக்களூரில் அமைந்துள்ள சன் சைன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சிறுவனின் பெற்றோர்கள் தெரிவிக்கையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தவறான சிகிச்சை அளித்தல் முழங்கால் கீழே செல்லும் நரம்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன, இந்நிலையில் ( சன் சைன் ) மருத்துவர் பிரபு சிறுவனுக்கு காலில் பகுதியில் அதிக அளவு ரத்தக் கசிவு ஏற்படுவதால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சொல்லுங்கள் என தனியார்மருத்துவம் கூறப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் பூந்தமல்லி தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சபிதா தனியார் மருத்துவமனையில் சிறுவனை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும்போது காலின் பகுதியில் வைக்கப்பட்டுள்ள இரும்பு பிளேட்டினால் நரம்பு நாளங்கள் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் சிறுவனின் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில். ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் அடுத்த காக்களூர் சாலையில் அமைந்துள்ள சன் சைன் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு முன்பு சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுக்கா காவல்துறையினர் சிறுவனின் குடும்பத்தினரிடம் மருத்துவரிடம் உரிய இழப்பீடு வாங்கி தருவதாக கூறி பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அதன் பின்பு மருத்துவமனை முன்பு இருந்த கூட்டம் கலைந்து சென்றது.