ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது....*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது....*;

Update: 2025-05-31 14:24 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சிவகாமி அம்பாள் உடனூரை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவில்.பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் இந்த வருடத்திற்கான வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கோவிலின் முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கோவில் அர்ச்சகர் ரகுபட்டர் கொடியேற்றினார்.முன்னதாக சித்திர சபையில் எழுந்தருளிய ஸ்ரீ வைத்தியநாதசுவாமி ஸ்ரீ சிவகாமி அம்பாள் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதனை அடுத்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன இன்றைய கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் ஜூன் 6-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News