சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து ஒரு அறை சேதம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து ஒரு அறை சேதம்;
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெம்பக்கோட்டை விளா மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துமாரி இவருக்கு சொந்தமான மாரீஸ்வரன் என்ற பட்டாசு ஆலை மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று 10க்கும் மேற்பட்ட அறைகளுடன் அதே கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு விதிமீறலில் ஈடுபட்டதாக ஆலயின் உரிமம் ரத்து செய்யப்பட்டது, இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் ஆளை உரிமம் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் அறை எண் ஒன்றில் பட்டாசு தயாரிப்புக்கான மவுண்ட் மூலப்பொருள் கலக்கும் அறையைத் திறந்த போது, மூலப்பொருள் நீர்த்து உராய்வின் காரணமாக திடீரென தீப்பிடித்து அரை முழுவதும் சேதம் அடைந்தது, இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதம் ஏற்படாமல் உயிர் தப்பினார்கள். உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வெம்பக்கோட்டை காவல் தறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.