ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளும் கிராம அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது

ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளும் கிராம அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ------;

Update: 2025-05-31 14:30 GMT
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளும் கிராம அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: கண்காணிப்புக்குழுக் கூட்டமானது கிராமப்புற பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அந்தந்த கிராமங்களில் நடக்க வேண்டும். ஒரு கிராமத்தில் எட்டு வகையான குழுக்கள் இருந்தது. அந்த குழுக்கள் எல்லாம் மாதந்தோறும் இணைந்து ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும். அப்பொழுது தான் கிராமங்களில் அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதற்காக அதிகமான இடங்களில் இந்த குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிறைய கிராமங்களில் இந்த குழுக்களின் மூலமாக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஒரு சில சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த குழுவில் முறையாக கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தாத பல கிராமங்களும் இருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக இது குறித்த புள்ளி விவரங்கள் பெறப்பட்டு, அதில் சுமார் ஏறத்தாழ 40 விழுக்காடு கிராமங்களில் மட்டும் தான் இக்குழுக் கூட்டம் முறையாக நடத்தப்பட்டது. மேலும், இதனுடைய நோக்கம் என்பது உங்களது பணிகளில் இந்த கிராமம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எத்தகைய முக்கியத்துவத்தை பெற்றுருக்கிறது என்பதற்காக தான். இந்த கண்காணிப்புக்குழு கூட்டம் நடத்துவதன் மூலமாக அதிகமான பிரச்சினைகள் தீர்க்க முடிகிறது. குழந்தை திருமணம், கல்வி இடைநிற்றல், போதை பொருட்கள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு, நாம் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்ற பொழுது, அரசினுடைய சட்டங்களை அமல்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலரோ அல்லது ஊராட்சி மன்ற செயலாளர்களோ உங்களுடைய பணியை சிறப்பாக செயல்படுத்துவதற்கு நீங்கள் எந்தெந்த சட்ட திருத்தங்களை எல்லாம் கிராமங்களில் அமல்படுத்தியவர்களோ அதனை அமல்படுத்ததற்கு உங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கான ஒரு கூட்டு முயற்சி தான் இந்த குழு. குழந்தை திருமணம், பிளாஸ்டிக் தடைச் சட்டம், சட்டம் ஒழுங்கு மற்றும் கனிம வளங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் முடிந்தவரை வராமல், அதனை நாம் ஆரம்பத்திலே சரிசெய்து விட வேண்டும். நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த ஒன்றையும் கிராம ஒருங்கிணைப்புக் குழுவின் மூலமாக அவற்றை விவாதித்து சரியான முறையில் செயல்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே அதனையெல்லாம் உங்களைப் போல இருக்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் பல இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே, அரசு பணிக்கு வருவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு. அதனை எல்லோருக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் பயன்படுத்துவது என்பது முக்கியமான செயல்பாடு. உங்களுடைய பணிக்காலத்தில் இதுபோன்று மற்றவர்களுக்கும் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு அரசினுடைய திட்டங்கள் மற்றும் சட்டங்கள் அவற்றையெல்லாம் சிறப்பாக அமல்படுத்தி, கிராமத்தை அனைத்து வகையிலும் சிறந்த கிராமமாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Similar News