முதியவர் மாயம் போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் முதியவர் மாயமானதால், குமாரபாளையம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.;
குமாரபாளையம் காந்திநகர் பகுதியில் வசித்து வந்தவர் தனுஷ்கோடி, 72. இவர் நேற்றுமுன்தினம் காலை 05:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இவரது மகனும், உணவு பாதுகாப்பு துறை அலுவலருமான ரெங்கநாதன், குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.