அரசு பள்ளியில் பணிகள் தீவிரம்

பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் தூய்மை பணிகள் தீவிரம்;

Update: 2025-05-31 16:48 GMT
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை வழிகாட்டுதல்களின்படி மே மாதம் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து வகையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 2025 சூன் 2 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனிடையே பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வே.அமுதா வேண்டுகோளின்படி 31-05-2025 இன்று செங்குணம் ஊராட்சி மன்ற செயலாளர் கோவிந்தன் முன்னிலையில் பள்ளி வளாகத்தினை சுத்தம் செய்தல், பள்ளி குடிநீர் சின்டெக்ஸ் டேக் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். பணியின் போது.குமார் அய்யாவு உடனிருந்தார்

Similar News