விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்
மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது;
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், வானுார், விழுப்புரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர்கள் சரவணன், கருணாநிதி முன்னிலை வகித்தனர். மண்டல தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து தொகுதி வாரியாக, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம், வரும் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்து, தேர்தல் பணிகள் குறித்தும், ஜூன் 3ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.