அஞ்செட்டியில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்
அஞ்செட்டியில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்ட வனத்துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அஞ்செட்டி அருகேயுள்ள சேசுராஜபுரத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது. ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் தலைமை வகித்தார். இதில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கி கூறினார்கள் . இதில் 30 பழங்குடி மலைவாழ் மக்கள் மற்றும் 10 பழங்குடி அல்லாதோர் தொழிலாளர் நலத்திட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்தனர்.