விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு 

கருங்கல்;

Update: 2025-06-01 11:41 GMT
குமரி மாவட்டம் செல்லங்கோணம் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (63). இவர் கால்நடை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 15ஆம் தேதி இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த மார்ட்டினை  உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மார்ட்டின் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்  பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News