கோவை: செந்தூர் வெற்றி - மரத்தான் ஓட்டம கோலாகலம் !

சிந்தூர் வெற்றியைப் போற்றும் விதமாக, சூலூர் கருமத்தம்பட்டியில் இன்று மராத்தான் ஓட்டம் கோலாகலமாக நடைபெற்றது.;

Update: 2025-06-01 12:11 GMT
சிந்தூர் வெற்றியைப் போற்றும் விதமாக, சூலூர் கருமத்தம்பட்டியில் இன்று மராத்தான் ஓட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மராத்தானில், பல்வேறு வயதுப் பிரிவினர் உற்சாகமாகப் பங்கேற்றனர். மராத்தான் 3 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் எனப் பல பிரிவினர் போட்டியிட்டனர். முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களுக்குப் பதக்கங்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த மராத்தான் ஓட்டத்தில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்த தொண்டர் ஒருவர் தேசியக்கொடியுடன் ஜெய்ஹிந்த் முழுக்கத்துடன் ஓட்டத்தில் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வியப்பில் ஆழ்த்தியது. நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் கரு. மாரிமுத்து, மாவட்டப் பொதுச் செயலாளர் கோபால்சாமி, கருமத்தம்பட்டி மண்டலத் தலைவர் பிரகாஷ், பெருங்கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர். மராத்தானில் வெற்றி பெற்ற மாணவி ஒருவர் பேசுகையில், நமக்காகப் போரிட்டு வெற்றியை நிலைநாட்டிய ராணுவ வீரர்களைப் போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த மராத்தானில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற தியாகங்களைச் செய்யப் பெண்கள் முன்நின்று எங்களைப் போன்ற மாணவர்களுக்கு உந்துதலாக உள்ளனர்" என்று தெரிவித்தார். மாவட்டத் தலைவர் கரு. மாரிமுத்து பேசுகையில், இந்திய நாட்டிற்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் தன்னெழுச்சியாகப் பொதுமக்களால் கிடைத்தது. இந்த மராத்தான் அதற்கு ஒரு சாட்சி. வயது பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளனர்" என்று தெரிவித்தார். இந்த மராத்தான், நாட்டின் சுதந்திரம் மற்றும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Similar News