ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவ்வையார் விருது பெற்ற எழுத்தாளர் திறந்து வைத்தார்.*
ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவ்வையார் விருது பெற்ற எழுத்தாளர் திறந்து வைத்தார்.*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவ்வையார் விருது பெற்ற எழுத்தாளர் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களின் அறிவு பசியை போக்குவதற்காக உபயதாரர்கள் உதவியுடன் அம்பேத்கர் பெயரில் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், கணிதம், சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், மனநல மருத்துவர் அர்ஜுனன் முன்னிலையில் தமிழக அரசின் ஔவையார் விருது பெற்ற எழுத்தாளர் பாமா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நூலகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு முன் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் விளக்கு ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.