ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை செவிலியருக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது ....* *டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் வழங்கி பாராட்டு...*
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை செவிலியருக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது ....* *டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் வழங்கி பாராட்டு...*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை செவிலியருக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது .... டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் வழங்கி பாராட்டு... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ளது சேத்தூர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு மங்கையர்க்கரசி (40) . இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2013ம் ஆண்டிலிருந்து தற்போது 2025 ஆம் ஆண்டு வரை செவிலியராக பணிபுரிந்து வருகிறார் .இவரின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி புரிதல் காரணமாக இவர் 2025 காண தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார் . இதற்கிடையே டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து 2025 க்கான நைட்டிங்கேல் விருதினை பெற்றார்.விருது பெற்ற இவருக்கு பதக்கமும் ஒரு லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை செவிலியர் அலமேலு மங்கையர்கரசியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.