அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.;
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் 2025- 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பின்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. சிறப்பு பிரிவினருக்கு ஜூன், 6ல், பொது கலந்தாய்வு ஜூன், 4, முதல் தர வரிசைப்படி நடைபெறவுள்ளது. ஜூன், 4ல், 400 முதல் 250 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் முதல், 80 மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரையும், ஆங்கிலத்தில் தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் முதல், 60 மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரையும், கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஜூன், 5ல், 279 முதல் 170 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், தமிழில் 79 மதிப்பெண்கள் பெற்றவர்கள் முதல், 60 மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரையும், ஆங்கிலத்தில் 59 மதிப்பெண்கள் பெற்றவர்கள் முதல், 48 மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரையும், கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஜூன், 6ல், 170 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றவர்களுக்கும், தமிழில் 60 மதிப்பெண்கள் கீழே பெற்றவர்களுக்கும், ஆங்கிலத்தில் 48 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.