மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் பயிற்சி நிறைவு: சான்றிதழ் வழங்கல்!

சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது.;

Update: 2025-06-01 16:52 GMT
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் நடத்தும் ‘‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி" என்ற ஒரு வாரகால உள்வளாகப்; பயிற்சியானது 23.05.2025 முதல் 30.05.2025 வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழாவானது இன்று காலை சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள உதவி இயக்குநர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 22 மீனவர்கள் கலந்து கொண்டார்கள். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ச. மாரியப்பன் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு துணை இயககுநர் சின்ன குப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த அனைத்து மீனவர்களுக்கும் படகு ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார். இவ்விழாவிற்கு சின்னமுட்டம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வெ. தீபா, தலைமையேற்றார். தனது தலைமையுரையில், ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் திட்டத்தின் முக்கியத்துவத்தை மீனவர்களுக்கு எடுத்துரைத்தார். லட்சுமிகாந்தன், உதவி இயக்குநர்,மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், நாகர்கோவில் வாழ்த்துரை வழங்கினார். அ. அந்தோணி மைக்கேல் பிரபாகர், உதவிப் பொறியாளர் நன்றியுரை ஆற்றினார்.

Similar News