நள்ளிரவில் கட்டையால் பெண் அடித்துக் கொலை
சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் கட்டையால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள அம்பலசேரியை சேர்ந்த தேவசுந்தரம் என்பவர் மனைவி சுயம்புகனி (63) என்பவர் நேற்று நள்ளிரவில் தனது வீட்டில் இருந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபரால் கட்டையால் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுயம்புகனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.